Tags

, , ,

சங்கப் பொதுக்கூட்டம்

தேதி: 20-5-1990
நாள்: ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 11 மணி
பொருள்: சங்க வளர்ச்சியில் நாம் ஆற்ற வேண்டிய பங்கு, நம் ஏரியாவில் குப்பை கூளங்கள் இல்லாமல் இருப்பதற்கு நம்மாலான முயற்சி, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியரை பொங்கல் விழாவில் சிறப்பித்து பரிசளிப்பது, இன்னபிற.

சங்கப் பொதுக்கூட்டம்

தேதி: 14-7-1991
நாள்: ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 11 மணி
பொருள்: புதிய உறுப்பினர்களை வரவேற்பது, பழைய விவகாரங்களை அலசுவது, சங்கத்திற்கு யார் அடுத்த தலைவர், அதன் நிதி நிலைமை, அதை முன்னேற்றுவதற்கு புதிய வழிமுறைகள் பற்றி விவாதம் இன்னபிற.

சங்கப் பொதுக்கூட்டம்

தேதி: 22-9-1991
நாள்: ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 11 மணி
பொருள்: சங்கத்தைத் தொடர்ந்து நடத்துவதா வேண்டாமா என்பது பற்றிய முடிவெடுக்க.

அடுத்த வருஷத்திலிருந்து இந்த நோட்டீஸே வரவில்லை. இழுத்து மூடிவிட்டார்கள். காதோரங்களில் ஃபங்க் வைத்திருக்கும் கபால பைரவ மாமாவிற்கும் ஃப்ரொபஸருக்கும் தலைமை பற்றிய இழுபறி, யாரும் கூட்டத்திற்கு வருவதில்லை, நிதி நிலைமை போதவில்லை என்று பல காரணம் சொன்னார்கள். இதில் நாங்கள் இழந்தது எங்களுடைய திறமையை எல்லாம் மேடையேற்ற ஒரு அரிய வாய்ப்பாக இருந்த பொங்கல் விழா நடக்காமல் போனது தான். அதை பிந்தைய வருடங்களில் லூஸு கார்த்தி அண்ட் கோ எடுத்து நடத்தி சாலமன் பாப்பையாவையெல்லாம் பட்டிமன்றத்திற்கு அழைத்து வந்தார்கள். ஆனால் அது முன்னிருந்தது போல சோபிக்கவில்லை, நாங்கள் விடலைப் பையன்களாகி விட்டிருந்தோம். அதுவும் காரணமாயிருக்கலாம்.

Advertisements