Tags

, , , , , , , , , ,

படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் அடங்காப்பிடாரிப் பிள்ளையைப் பார்த்து அவன் அம்மா (சந்திரமுகி படத்தின் ராரா பாடல் மெட்டில்) பாடும் பாடல். பையன் வழக்கம்போல டெஸ்டில் நூத்துக்கு 3 மார்க் வாங்கிண்டு வந்திருக்கான். வாசலோட நிக்கறான் உள்ள வர பயந்துண்டு. அம்மா பாடுகிறாள்…

வாடா…சும்பக் கடங்காரா….!
அட வாடா…வீட்டுக்குள்ளே போடா…!

மானமே போகுண்டா, வீட்டுக்குள்ளே வாஆடா
வாசலோ ட போறவாள்ளாம்….பார்த்தா!

(வாடா)

(சரணம்)

(அம்மா)நீ மட்டும் பரீக்ஷையில் ஃபெயில் மார்க்கு வாங்கினேன்னா
மடிக்கோலை முறிப்பேனடா
ஆ அ அ ஆ
ஒனக்காக ஒம் பாட்டி பரிஞ்சுண்டு வந்தாலும் கையெழுத்து** கிடைக்காதுடா

(பிள்ளை தாம் தூம் னு குதிக்கறான்)
திரண தீம் த தீம் த தீம் தனா
நீ மட்டும் கைய்யெழுத்து போட்லைன்னா
நான் வீட்டை விட்டுப் போயிடுவேன்
எங்கேயானா…

(அம்மா)
வயசு நாலு கழுதைக்காச்சுடா
பக்கத்து வீட்டுப் பொண்ணைப் பாருடா (இதை ஒங்கூடப் பொறந்ததைப் பாருடா” என்றும் சொல்லலாம்)
அது வாங்கின மார்க்கு நூறுடா,
நூறுடா…!

(பிள்ளை)
எந்த டெஸ்டுப் பேப்பர் ஆனாலும்
நானுஞ் சூப்பராத்தான் எழுதறேன்
இந்த வாத்தி மார்க்கு போடாட்டா
ஏந்தப்பா…?! (என் தப்பா)

(அம்மா)
ஊரு சிரி சிரி சிரி யின்னு வழிச்சுண்டு சிரிக்குண்டா…!!!!
(டென்ஷன் மெளண்ட் ஆறது, டடடாஆண்ண்  – மீசிக்)
நீயும் முசு முசு முசுவுன்னு அழுதுண்டு நிப்பேடா…!!!
(டாஆஆண்ண்ண்ண் – மீசிக்)

கப கப கப கப வென வயித்தெல்லாம் கலக்கிண்டு
ரிசல்டுப் பேப்பரில் நம்பரைத் தேடிண்டு
நல்ல்ல புத்தியை இவனுக்குக் குடுடா ராமா…!

மாமி “தளாங்கு தகஜனு தளங்கு தகதிமி” மாதிரி மெதுவாக

ஒண்ணப் பொஸ்தகத்த எடு எடுன்னு முட்டிக்க வேண்டிருக்கு
ஒண்ண வை வைங்க வேண்டிருக்கு. தலையெழுத்து!

** ப்ராக்ரஸ் ரிபோர்ட்டில் கையெழுத்து வாங்குவோமே..அதான்.

பி.கு: மேற்பாடலில் யாரையும் குறிப்பிட்டோ சொல்லவில்லை. யாரானும் ரிலேட் பண்ணிக் கொண்டீர்களேயானால் நான் பொறுப்பில்லை.

Advertisements